ஐபிஎல் 2019: மார்ச் மாதம் 23ம் தேதி முதல்  தொடங்குகிறது ஐபிஎல்..!

12வது ஐபிஎல் தொடர் 2019 மார்ச் மாதம் 23ம் தேதி முதல்  தொடங்குகிறது.

ஐபிஎல் 11வது சீசனை சென்னை அணி வென்றது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

இந்த வருடம் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்காக தங்களது அணியில் களமிரக்க அணிகள் வீரர்களை ஏலம் எடுத்தது.

இந்நிலையில் 12வது ஐபிஎல் தொடர் 2019 மார்ச் மாதம் 23ம் தேதி முதல்  தொடங்கும் என்று  ஐபிஎல் நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.12வது ஐபிஎல் தொடர் இந்தியாவிலேயே நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.