கல்வி அலுவலகங்களில் கொண்டாடப்படும் சுதந்திர தினவிழாவுக்கு இவர்களை அழைத்து கௌரவியுங்கள் – பள்ளிக்கல்வித்துறை

கல்வி அலுவலங்களில் சுதந்திர தினவிழாவை எளிமையாக கொண்டாட வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின்  எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், கல்வி அலுவலங்களில் சுதந்திர தினவிழாவை எளிமையாக கொண்டாட வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களையும், மருத்துவர்களையும், செவிலியர்களை, சுகாதாரப்பணியாளர்களையும் சுதந்திர தினவிழாவுக்கு அழைத்து கௌரவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.