எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில் விசாரணை அறிக்கை!

இபிஎஸ் தாக்கல் செய்த சொத்து விவரங்களை தவறாக இருப்பதாக விசாரணை அறிக்கையில் குற்றப்பிரிவு போலீசார் தகவல்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில் விசாரணை அறிக்கையை சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் காவல்துறை. 2021 சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்த பிராமண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. சொத்து விவரங்களை தவறாக இருப்பதாக விசாரணை அறிக்கையில் குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொத்துப் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர் மனுவில் குறிப்பிட்டு சமர்ப்பித்தார். அந்த தகவல் உண்மையில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி தனது சொத்துக்களை மறைத்துவிட்டார் எனவும் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக இபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக சேலம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய சேலம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து இபிஎஸ் முறையிட்டிருந்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில் விசாரணை அறிக்கையை சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் காவல்துறை.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்