28 C
Chennai
Tuesday, April 13, 2021

சென்னையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை.! கரையை கடக்கும் மையப்பகுதி.!

நிவர் புயல் புதுச்சேரியில் கரையை கடந்து வரும் நிலையில், சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் மெரினா கடற்கரை, சாந்தோம், அடையார், பட்டினப்பாக்கம் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், வடபழனி, ஆதம்பாக்கம், வேளச்சேரி போன்ற பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்து வருகிறது.

புதுச்சேரி வடக்கே நிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடந்து வருகிறது. புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் நிவர் புயல் கரையை கடந்து வருகிறது. கடலூரில் இருந்து 40 கி.மீ, சென்னையில் இருந்து 110 கி.மீ தொலைவில் கரையை கடக்கிறது நிவர் புயல்.

இந்த புயல் தற்போது 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதிதீவிர புயலான நிவர்-ன் மையப்பகுதி கரையை கடந்து வருவதால், கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூரில் காலை 8.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 22.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

புதுச்சேரி 18.7 செ.மீ., சென்னை 8.9 செ.மீ., காரைக்கால் 8.4 செ.மீ., நாகையில் 6.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. புயலின் மையப்பகுதி கரையை கடந்து வருவதால், கடலூர் மற்றும் புதுச்சேரி சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன.

Latest news

Related news