நேபாளத்தில் சர்வதேச விமானம் செப்டம்பர்-1 முதல் மீண்டும் தொடக்கம்.!

செப்டம்பர் 1 முதல் நேபாளம் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்க உள்ளது .

கடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 1 முதல் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது என்று நேபாள அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் நேபாளம் மார்ச் 22 அன்று சர்வதேச விமானங்களை நிறுத்தியது.

ஆகஸ்ட் 17 முதல் சேவைகளை மீண்டும் தொடங்க நாடு முன்னர் திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் அதிகரிப்பு மத்தியில் ஊரடங்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்தது.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், நிதி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் யூபராஜ் காதிவாடா கூறுகையில், கலாச்சாரம், சுற்றுலா மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் செப்டம்பர் 1 முதல் விமான அட்டவணையை வெளியிடும். இதுவரை, மனிதாபிமான நோக்கத்திற்காகவும், மருத்துவப் பொருட்களை வழங்குவதற்காகவும் பட்டய விமானங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

இதற்கிடையில் குறிப்பிட்ட நாடுகளிலிருந்து மற்றும் குறிப்பிட்ட நேபாளி மற்றும் வெளிநாட்டினருக்கு மட்டுமே விமானங்களை அனுமதிக்க திட்டமிடப்பட்ட விமானங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.