எலன் மஸ்க்கின் கனவுத்திட்டதில் குறுக்கிட்ட மழை.. 30 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனதின் புதிய சாதனை, மோசமான வானிலை மற்றும்

By surya | Published: May 28, 2020 12:09 PM

தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனதின் புதிய சாதனை, மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக அந்த திட்டத்தை 17 நிமிடங்களுக்கு முன்பு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, 9 ஆண்டு இடைவேளைக்கு பிறகு இந்தாண்டு மே மாதத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் என தெரிவித்துள்ளது. அதற்கான பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்து வருகின்ற நிலையில், இந்த திட்டத்திலிருந்து பின்வாங்காமல் உள்ளது.

Image

மேலும், இதுவுமுறை அமெரிக்காவில் தொடங்கிய அணைத்து விண்வெளி பயணத்தில் நாசாவின் ராக்கெட் மற்றும் விண்கலங்களே பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த முறை தனியார் விண்கல நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனதின் பால்கான் 9 (FALCON 9) ரக ராக்கெட் மூலம் டக்ளஸ் ஹார்லி, பாப் பென்கண் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் வரும் மே 27 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று நாசா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்ததுள்ளது‌.

இந்நிலையில் மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக அந்த திட்டத்தை 17 நிமிடங்களுக்கு முன்பு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஒத்திவைத்துள்ளது. மேலும், அந்த ராக்கெட் வரும் மே 30 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி நிறுவனத்திற்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கொண்டு சென்றது. இதனால் விண்ணில் சென்ற அனுபவம் அந்நிறுவனத்திற்கு உள்ளது. அரசு அமைப்புகளைவிட நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. மேலும், மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க்கின் கனவுத்திட்டம். இதற்காக பொதுமக்கள் முதல் அதிபர் வர அனைவரும் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc