தமிழக அரசு தொடக்க பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் சேர 60,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என தகவல்.
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதன் மூலமாக, நல்ல தேர்ச்சி முடிவுகள், ஆங்கிலவழிக்கல்வி, மற்றும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் அரசுப்பள்ளிகள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. இதன் விளைவாக தமிழக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு பின்னர் மாணவர் சேர்க்கை தொடங்கும் நிலையில், இந்தாண்டு மாணவர் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கியது. இதன்படி தமிழக அரசு தொடக்க பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர, 60,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இந்த ஆண்டு வழக்கமான எண்ணிக்கையை விட, மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.