அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! வடகொரியாவில் ஊரடங்கை நீக்கிய அதிபர்!

வடகொரியாவில் ஊரடங்கை நீக்கிய அதிபர்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. வடகொரியாவின் எல்லைப்பகுதி நகரான கேசாங்கில், கொரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டறியப்பட்ட நிலையில், அதிபர் கிம் ஜாங் உன் வடகொரியா முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தினார்.

 இந்நிலையில், தற்போது வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், அங்கு ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது. மேலும், வடகொரியாவில் மட்டும் கொரோனா பாதிப்பு குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது வடகொரியாவில் கொரோனா அதிகமாக பரவ துவங்கியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.