தீவிரமாகும் உள்ளாட்சி தேர்தல் பணிகள்! தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தமிழக உள்ளாட்சி தேர்தல் ஆனது தற்போது விரைவில் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களில் அதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தற்போது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இவர் ஏற்கனவே மாவட்டந்தோறும் அந்தந்த மாவட்ட அதிகாரிகளுடன் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். தற்போது முதன்முறையாக அனைத்து கட்சி கூட்டம் மூலம் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேடு
இந்த கூட்டத்தில் அதிமுக உட்பட 10 கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் மறைமுக தேர்தல் முறை,  வாக்குச்சீட்டு முறை வாக்களிப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இதில் ஆலோசிக்க உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.