டிக் டாக் பிரபலங்களுக்கு நிதியுதவி அளித்து தன் பக்கம் ஈர்க்கும் ஃபேஸ்புக் நிறுவனம்

டிக் டாக் பிரபலங்களுக்கு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் சேவை பகுதியில் வீடியோ பதிவிட அழைப்பு விடுக்கப்படவுள்ளதாம். மேலும், பிரத்யோகமாக வீடியோ வழங்கும் படைப்பாளிகளுக்கு நிதி உதவி அளிக்கவும் பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், பாதுகாப்புக்கு அச்சறுத்தலாகவும் செயல்படுவதாக கூறி டிக் டாக் உள்ளிட்ட 59 சீன மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. தற்போது இதனை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் செயலுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத்தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் செயலியில் செயல்பட்டு வரும் ரீல்ஸ் சேவையில்  டிக் டாக் பிரபலங்களை ஈர்க்க ஒரு புதிய யுக்தியை கையாள உள்ளது. அதன்படி டிக்டாக்கில் அதிக பாலோவர்களை வைத்திருக்கும் டிக் டாக் பிரபலங்களுக்கு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் சேவை பகுதியில் வீடியோ பதிவிட அழைப்பு விடுக்கப்படவுள்ளதாம். மேலும், பிரத்யோகமாக வீடியோ வழங்கும் படைப்பாளிகளுக்கு நிதி உதவி அளிக்கவும் பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

வளர்ந்து வரும் படைப்பாளிகளை வெளியே கொண்டு வருவதற்காகவும், இன்ஸ்டாகிராமில் புதிய நட்சத்திரங்களை உருவாக்கவும் இது உதவும் என பேஸ்புக் செய்தி தொடர்பாளர் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகு, பிரேசில், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளை தொடர்ந்து நான்காவது நாடாக இந்தியாவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் சேவையை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் அடுத்த மாதம் பேஸ்புக் நிறுவனமானது, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.