போலீஸ் ஜீப்பில் இளம் பெண்ணுடன் சுற்றி திரிந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.!

போலீஸ் இன்ஸ்பெக்டர் சினு இரவு போலீஸ் ஜீப்பில் இளம் பெண்ணுடன் சுற்றி

By ragi | Published: Jul 06, 2020 12:10 PM

போலீஸ் இன்ஸ்பெக்டர் சினு இரவு போலீஸ் ஜீப்பில் இளம் பெண்ணுடன் சுற்றி திரிந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கேரளாவில் கண்ணூர் பகுதியில் உள்ள கவிகோத்தகிரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சினு. அங்குள்ள போலீஸ் ஜீப்பின் டிரைவர் செரின். சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் ஜீப்பை செரின் ஓட்ட சினு கண்ணூர் பகுதியை சுற்றி வர, அவருடன் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் இருந்துள்ளார். நீண்ட நேரம் சுற்றி திரிந்த ஜீப், சிறிது நேரம் கழித்து ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுத்தப்பட்டதாகவும் நீண்ட நேரம் , இன்ஸ்பெக்டர் மற்றும் அந்த பெண் தனியாக நின்று பேசி கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அந்த வழியாக வந்த ஒருவர் மொபைல் மூலம் வீடியோ எடுத்து கண்ணூர் துணை போலீஸ் சூப்பிரண்டான பிரேம்ராஜனுக்கு அனுப்ப, இது குறித்து விசாரணை நடத்தும் படி கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரஜிவிக்கு உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட விசாரணையில் பெண்ணுடன் போலீஸ் ஜீப்பில் இன்ஸ்பெக்டர் நீண்ட நேரம் சுற்றி திரிந்ததும், ஆளில்லாத பகுதியில் வெகு நேரம் பேசியதும் தெரிய வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சினுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் துணை போலீஸ் சூப்பிரண்டான பிரேம்ராஜன். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Step2: Place in ads Display sections

unicc