தோனியிடம் கற்ற வித்தையை களத்தில் இறக்கும் விராட் கோலி வீடியோ உள்ளே

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்கள் இழப்புக்கு  329 ரன்களை எடுத்தது.

அதன் பின்பு களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.முதல் ஓவரிலேயே ஜேசன் ராய் விக்கெட்டையும் மூன்றாவது ஓவரில் ஜானி பேர்ஸ்டோ விக்கெட்டையும் இழந்தது.தமிழக வீரர் நடராஜனிடம் 10 வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

15 வது ஓவரை வீசிய ஷார்துல் தாக்கூர் LBW முறையில் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்க செய்தார்.இந்த விக்கெட்டுக்கு அம்பயர் உடனடியாக விக்கெட் கொடுக்கவில்லை. கேப்டன் விராட் கோலி டிஆர்எஸ் முறைப்படி கேட்க மூன்றாவது நடுவர் LBW தான் என்று விக்கெட் கொடுத்தார்.இது ஆட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இந்த டிஆர்எஸ் முறைக்கு சற்றும் சளைக்காமல் யோசிக்காமல் உடனடியாக அடுத்த கட்டத்திற்கு செல்பவர் தோனி அவரைத் தொடர்ந்து அவரிடம் கற்ற நுணுக்கங்களை  தெளிவாக செயல்படுத்தி வருகிறார் விராட் கோலி.

தற்பொழுது வரை இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்களை எடுத்து ஆடி வருகிறது.

168-6 (25.4 OV)

author avatar
Dinasuvadu desk