இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலை வகிப்பதால் இன்றைய போட்டி தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக கருதப்படுகிறது. இதில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெடுகையும் இழந்து 269 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 47 ரன்களும் , அலெக்ஸ் கேரி 38 ரன்களும் எடுத்தனர் இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் குலதீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 50 ஓவர்களில் 270 ரன்கள் அடித்தல் தொடரை கைப்பற்றலாம் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.