சொதப்பல் பேட்டிங்க்.!விழுந்த முதல் அடி தோல்வி..! டெஸ்ட்டை வசப்படுத்தியது நியூசி..!

சொதப்பல் பேட்டிங்க்.!விழுந்த முதல் அடி தோல்வி..! டெஸ்ட்டை வசப்படுத்தியது நியூசி..!

இந்திய அணிக்கு எதிரான வெலிங்டன் முதல் டெஸ்ட் போட்டியில்  நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த முதல் தோல்வியாகும்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி விளையாடி வருகிறது.தற்போது இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.இந்த தொடரானது கடந்த பிப்., 21ம் தேதி தொடங்கியது.இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் பின் களமிறங்கிய இந்திய அணி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்165 ரன்களுக்குள் முதல் இன்னிங்கிஸில் ஆல் அவுட் ஆகி சுருண்டது.பின்னர் களமிறங்கிய நியுசிலாந்து வீரர்கள் நிதான ஆட்டத்தை ஆடி ரன் குவிப்பில் ஈடுபடவே அந்த அணி 348 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.இதில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுக்களை இந்திய அணி தரப்பில் வீழ்த்தினார்.

Image

இதனைத் தொடர்ந்து 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கும் போது மீண்டும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்து ஆட்டம் கண்டது. நிலைமை சுதாரித்து கொண்டு ஓரளவு தாக்குப்பிடித்த மயங்க் அகர்வால் மட்டும் அரைசதம் அடித்து  அதிகபட்சமாக 58 ரன்களை குவித்தார்.

Image

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 191 ரன்களுக்குள் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களிடம் சுருண்டது.அந்த அணி தரப்பில் சவூதி 5 விக்கெட்டுக்களையும் , போல்ட் 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி அசத்தினர்.நியூசி.,9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.நியூசி.,அணியின் தொடக்க வீரர்கள், 1 .4 ஓவரில் எளிதாக இலக்கை எட்டி முதல் டெஸ்ட்டில் முதல் வெற்றியை ருசித்தனர். இந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி நியுசிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட டிம் சவூதி ஆட்டநாயகன் விருதுதினை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த முதல் தோல்வி இதுவாகும்.

author avatar
kavitha
Join our channel google news Youtube