படு மோசமான வேகத்தில் பந்துவீசிய நியூசிலாந்து..! அபராதத்தை விதித்தது ஐசிசி

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆமைவேகத்தில் பந்துவீசிய காரணத்தால் நியூசிலாந்து அணிக்கு 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி சாதித்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆனது நடைபெற்று வருகிறது. நேற்று ஆக்லாந்தில் ஈடன்பார்க் மைதானத்தில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்தது.274 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, இலக்கை எட்ட முடியாமல் 251 ரன்களுக்குள் சுருண்டது.இதனால் ஒருநாள் தொடரை 2-0 என்று  நியூசிலாந்து கைப்பற்றியது.

இதற்கிடையில் இந்திய அணி பேட்டிங்கின் போது நியூசிலாந்து அணியானது மூன்று ஓவர்கள் மிகத் தாமதமாக பந்துவீசியதாக போட்டி நடுவர் அறிவித்தார். எனவே ஐசிசி விதிகளின் படி ஒவ்வொரு ஓவருக்கும் 20 சதவீதம் என்ற அடிப்படையில்  நியூசிலாந்து அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 60 சதவீதம் அபராதமாக  விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
kavitha