செங்கல்பட்டு HLL நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி குறித்து பேச இன்று டெல்லி செல்கிறார் தொழில்துறை அமைச்சர்!

Thangam Tennarasu

செங்கல்பட்ட்டில் உள்ள மத்திய அரசின் HLL நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தி  தொடங்குவது குறித்து மத்திய அரசிடம் பேசுவதற்காக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இன்று டெல்லி செல்கிறார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அது போல தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கொரோனாவின் தீவிரத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே கொரோனாவை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான தீர்வு என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனவே மக்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதில் தீவிரம் காட்டி வருவதால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,மத்திய அரசின் HLL பயோடெக் தடுப்பூசி நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மையம் செங்கல்பட்டில் அமைந்துள்ளது. ஆனால் இந்த நிறுவனம் கட்டப்பட்டது முதல் இதுவரை தடுப்பூசி உற்பத்தி தொடங்கப்பட்டமால் உள்ளது. எனவே, இது குறித்து மத்திய அரசிடம் நேரில் பேசுவதற்காக மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இன்று டெல்லி செல்கிறார்.

ஏற்கனவே நேற்று முன்தினம் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேரடியாக தடுப்பூசி நிறுவனத்திற்கு சென்று ஆய்வு நடத்திய நிலையில், உரிய நிதி ஒதுக்கி தடுப்பூசி உற்பத்தி பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து தற்போது இந்த செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்வது தொடர்பாக மத்திய அரசிடம் நேரடியாக சந்தித்து பேசுவதற்காக மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொழில் துறை செயலாளர் மற்றும் சில அதிகாரிகளும் இன்று டெல்லி செல்கின்றனர்.