இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி..! மலேஷியாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்..!

By

IndonesiaOpen2023

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி இன்று ஜகார்த்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்திய வீரர்கள் சாத்விக், சாரக் ஆகியோர் இறுதிப்போட்டியில் உலக சாம்பியனான மலேஷியாவின் ஆரோன் சியா மற்றும் சோ வூய் யிகா ஜோடியை 21-17, 21-18 என்ற கணக்கில் தோற்கடித்து, பிடபிள்யூஎப் (BWF) சூப்பர் 1000 பட்டத்தை வென்ற முதல் இந்திய பேட்மிண்டன் வீரர்கள் என்ற சாதனையை படைத்தனர்.