இந்தியா - பாகிஸ்தான் இடையே அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இறுதிப்போர்-பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேச்சு

இந்தியா - பாகிஸ்தான் இடையே   அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இறுதிப்போர் 

By venu | Published: Aug 29, 2019 01:37 PM

இந்தியா - பாகிஸ்தான் இடையே   அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இறுதிப்போர்  நடக்கும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது எச்சரித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும்  மேலும் ஜம்முவை தனி யூனியன் பிரதேசங்களாகவும் , லடாக்கை தனி யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.இதன் பின்னர் காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் உதவியை எதிர்பார்த்த பாகிஸ்தானுக்கு சீனாவின் உதவி மட்டுமே கிடைத்தது. இந்தநிலையில் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான தகவல்களின் படி,  ராவல்பிண்டியில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே இந்த வருடம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இறுதிப்போர் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடியின் முடிவால், காஷ்மீர் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்று பேசியுள்ளார் . இவரது இந்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc