இந்தியாவில் குடிமகன்களின் எண்ணிக்கை உயர்ந்தது….!!!

இன்றைய சமுதாயத்தினர் அநேகர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். மிக சிறிய வயதில் ஆண்கள் முதல் முதியவர்கள் வரை குடிப்பழக்கத்திற்கு ஆளாகின்றனர். குடிமகன்களுக்கு சாதகமாக கண்ணுக்கெட்டும் தூரமெல்லாம் டாஸ்மார்க் கடைகள். மதுபானத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபட வலி தெரியாமல், எல்லா போதை வஸ்துக்களும் அடிமையாகின்றனர்.

இந்தியாவில் குடிமகன்களின் எண்ணிக்கையை உலக சுகாதார மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியர்களில் கடந்த 10 வருடத்துக்குள் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

2005ல் தனி நபர் ஒருவர் மது குடிக்கும் அளவு 2.4 லிட்டராக இருந்தது, ஆனால் 2016ம் ஆண்டில் 5.7 லிட்டராக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதில் பெண்கள் 1.5 லிட்டர் அளவும், ஆண்கள் 4.2 லிட்டர் அளவும் மது வருந்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment