நொய்டாவில் 150 அடி உயர இந்தியாவின் மிக உயரமான ஷாப்பிங் மால்…

By

Tallest mall

நொய்டாவில் இந்தியாவின் மிக உயரமான ஷாப்பிங் மால் கட்டப்பட்டு வருகிறது.

150 அடி உயரம் கொண்ட நாட்டின் மிக உயரமான வணிக வளாகமாக, நொய்டாவில் ஷாப்பிங் மால் ஒன்றை சாயா குழுமம் உருவாக்கி வருகிறது. நொய்டா-கிரேட்டர் நொய்டா அதிவிரைவுச்சாலையில் நொய்டாவின் செக்டார் 129 பகுதியில் 2000 கோடி ரூபாய் செலவில் ‘சாயா ஸ்டேட்டஸ்’ மால் கட்டப்பட்டு வருகிறது.

ரியல் எஸ்டேட் நிறுவனமான சாயா குரூப், நொய்டாவில் இந்தியாவின் மிக உயரமான ஷாப்பிங் மாலாக உருவாக்கி வருகிறது. இந்த ஷாப்பிங் மால்14 லட்சம் சதுர அடி பரப்பளவில் 9 மாடிகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த மால், 2025 ஆம் ஆண்டு திறக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், கிட்டத்தட்ட 25 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. சிங்கப்பூரில் உள்ள சர்வதேச கட்டிடக்கலை நிறுவனமான டிபி ஆர்கிடெக்ட்ஸ் இதை வடிவமைத்துள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய 55 பிராண்டுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன, அவற்றில் சுமார் 30 நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன, மொத்தம் 1,600 கார்கள் நிறுத்தும் வசதி இருக்கும் என்றும் சாயா குழுமத்தின் தலைவர் விகாஸ் பாசின் தெரிவித்தார்.