இந்தியாவின் முதல் பெண் ரோபோ போலீஸ்! கேரளாவின் வியக்கத்தக்க சாதனை! இதோட வேலை என்னனு தெரியுமா?

மற்ற மாநிலங்களை விட எப்போதுமே கேரளா ஒரு படி மேலே உள்ளது என்பது நாம் நன்கு அறிந்த ஒன்று தான். இதை மீண்டும் மெய்ப்பிக்கும் வகையில் கேரளா அரசு ஒரு புதுவித முயற்சியை செய்துள்ளது. அதுவும் அறிவியலின் உதவியோடு இம்முறை களம் இறங்கியுள்ளது. தொழிற்நுட்பத்தை சரியான முறையில் ரோபோ வடிவில் இவர்கள் பயன்படுத்தி இருப்பதே இதன் தனி சிறப்பு என்றே சொல்லலாம்.

பெண் போலீஸ் ரோபோ!
ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை இயந்திரத்தில் கேரளா அரசு மிச்சம் விட்டு வைக்கவில்லை. அதாவது, தற்போது கேரளாவில் பெண் ரோபோ ஒன்றிற்கு எஸ்.ஐ பதவியை வழங்கி அதன் பணியை தொடங்கி வைத்துள்ளார் முதல்வர் பினராயி விஜயன் அவர்கள்.

பெயர் என்ன?
இந்த பெண் போலீஸ் ரோபோவிற்கு “KP-BOT” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ தான் இந்தியாவின் முதல் போலீஸ் ரோபோ என்கிற சிறப்பு அந்தஸ்தையும் பெற்றுள்ளது. இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.


சிறப்பம்சங்கள்
இந்த போலீஸ் ரோபோவில் முகத்தை அடையாளம் அறிந்து கொள்ளும் (facial recognition technology) தொழிற்நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பான செயற்கை நுண்ணறிவு திறனும், அதி நவீன சென்சார்களும் இணைக்கப்பட்டுள்ளது. ஆதலால், இந்த ரோபோ வியக்கத்தக்க முறையில் தனது பணியை செய்யும் என கேரளா காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment