Kiren Rijiju Arctic

ஆர்க்டிக்கில் இந்தியாவின் முதல் ஆராய்ச்சி நிலையம்… வீடியோ பகிர்ந்த அமைச்சர் கிரண் ரிஜிஜு.!

By

ஆர்க்டிக்கில் அமைந்த்துள்ள இந்தியாவின் முதல் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட்டார் அமைச்சர் கிரண் ரிஜிஜு.

ஆர்க்டிக் பிரதேசத்தில் இந்தியாவின் முதல் ஆராய்ச்சி நிலையமான ஹிமாத்ரிக்கு மத்திய புவி அறிவியல் அமைச்சர் கிரண் ரிஜிஜு பார்வையிட்டுள்ளார். இது நார்வேயின் ஸ்வால்பார்டில் உள்ள நை-அலெசுண்டில் உள்ள சர்வதேச ஆர்க்டிக் ஆராய்ச்சி தளத்தில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் ஆராய்ச்சி நிலையமும் கூட.

இது குறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சர் கிரண் ரிஜிஜு, தனது பயணத்தின் வீடீயோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஆராய்ச்சியாளர்கள் இந்தியா மற்றும் எதிர்கால உலகத்திற்குமான அற்புதமான பணிகளைச் செய்துவருகின்றனர். மேலும் ஆராய்ச்சியாளர்களுடன் இந்த பயணம் ஒரு மறக்க முடியாத தருணம் என கூறினார்.

ஹிமாத்ரி ஆராய்ச்சி நிலையத்தில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் ஏரோசல் கதிர்வீச்சு, விண்வெளி வானிலை, உணவு-வலை இயக்கவியல், நுண்ணுயிர் சமூகங்கள், பனிப்பாறைகள், வண்டல்வியல் மற்றும் கார்பன் மறுசுழற்சி ஆகியவற்றில் பணியாற்றி வருகின்றனர். மரபியல், பனிப்பாறை, புவியியல், வளிமண்டலத்தில் மாசுபாடு மற்றும் விண்வெளி வானிலை ஆகியவற்றிலும் தங்களது ஆய்வினை மேற்கொண்டு வருவதாக கிரண் ரிஜிஜு மேலும் தெரிவித்தார்.

Dinasuvadu Media @2023