அமெரிக்காவில் ஊழல் ஒழிப்பு பணிக்காக சாம்பியன்ஸ் விருது பெற்ற இந்தியப் பெண்மணி!

அமெரிக்காவில் ஊழல் ஒழிப்பு பணிக்காக சாம்பியன்ஸ் விருது பெற்ற இந்தியப் பெண்மணி!

அமெரிக்காவில் சிறப்பாக ஊழல் ஒழிப்பு பணி செய்ததற்காக சர்வதேச சாம்பியன்ஸ் விருதை இந்திய சமூக ஆர்வலரான அஞ்சலி பரத்வாஜ் அவர்கள் பெற்றுள்ளார்.

இந்தியாவின் தகவல் அறியும் உரிமை இயக்கத்தில் கடந்த இருபது ஆண்டு கால உறுப்பினராக இருந்து வருபவர் தான் அஞ்சலி பரத்வாஜ். சடார்க் நாகரீகம் சங்கதன் எனும் அமைப்பை உருவாக்கி நடத்தி வரும் இந்த பெண்மணி, அரசின் வெளிப்படை தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் பணியாற்றிவருகிறார். இவரது தலைமையின் கீழ் தான் பொது துறை ஊழியர்களின் பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் அடங்கிய அறிக்கை விவரங்கள் கொண்ட பட்டியல் தயார் செய்யப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் இவர் ஊழலை வெளிக் கொண்டு வருவோர் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்வோர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக பாதுகாப்பு சட்டங்களை உருவாக்கும் பணியையும் செய்து வந்துள்ளார். இவரது இந்த மகத்தான பணிக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் தலைமையிலான அரசு தற்போது சர்வதேச ஊழல் ஒழிப்பு சாம்பியன்ஸ் விருதினை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube