ஜெருசலேமின்,காசா பகுதியில் நடந்த தாக்குதலில் இந்திய பெண் பலி..!

ஜெருசலேமின் காசாவை இஸ்ரேல் தாக்கியதில் இந்திய பெண் உட்பட 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

புனித ரமலான் மாதம் ஆரம்பமானதிலிருந்து இஸ்ரேல் காவல்துறையினருக்கும்,பாலஸ்தீனர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில்,திங்கள்கிழமையன்று பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேல் காவல்துறையினரின் மீது கற்கள் உள்ளிட்ட சில பொருள்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து,பாலஸ்தீனர்களைக் கட்டுபடுத்த இஸ்ரேல் காவல்துறையினர் ரப்பர் தோட்டாக்கள், ஸ்டன் கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.இந்த கலவரத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இருப்பினும்,இந்த மோதலில் 21 காவல்துறையினர்  காயமடைந்ததாக இஸ்ரேல் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வன்முறைகளுக்கு மத்தியில்,ஹமாஸ் இயக்கத்தினர் ஜெருசலேமில் ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர்.இதற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் திங்கள் இரவு காசாவில் பயங்கர வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.இதில்,ஒன்பது குழந்தைகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து,நேற்று அதிகாலையிலும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.இதில்,6 பேர் கொல்லப்பட்டனர்,இந்த தாக்குதலினால் இறந்தவர்களில் ஒருவர்,கேரளா மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த செவிலியர் சவுமியா என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 7 ஆண்டுகளாக இஸ்ரேல் மூதாட்டி ஒருவரை பராமரிக்கும் பணியில் சவுமியா ஈடுபட்டு வந்துள்ளார்.இந்நிலையில்,சவுமியா தனது கணவருடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்த போது,இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

மேலும்,இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆக உயரந்துள்ளது.மேலும்,150 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து,இஸ்ரேலின் இத்தகைய  நடவடிக்கைகளுக்கு ஐ.நா அமைப்பு  கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து,இந்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூறியதாவது,”இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.அதில்,கேரளாவைச் சேர்ந்த செவிலியர் சவுமியா என்பவரும் உயிரிழந்துள்ளார்.அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும்,இறந்த செவிலியர் சவுமியா குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்க வெளியுறவு துறை தயாராக உள்ளது”,என்று கூறினார்.