பங்களாதேஷ் அணியிடம் போராடி வெற்றி பெற்ற இந்தியா! அரை இறுதிக்கு முன்னேற்றம் !

இன்றைய போட்டியில் இந்திய அணியும் ,பங்களாதேஷ் அணியும் மோதியது.இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

  முதலில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் , ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக இருவருமே விளையாடி வந்தனர்.இப்போட்டியில் ரோஹித் சர்மா தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் 92 பந்தில் 104 ரன்கள் குவித்தார்.

பின்னர் அடுத்த வீரராக விராட் கோலி களமிறங்கினர்.நிதானமாக விளையாடி வந்த கே.எல் ராகுல் 77 ரன்னில் வெளியேறினர்.பிறகு ரிஷாப் பந்த் , விராட் கோலி இருவரின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது.

கேப்டன் கோலி நிதானமாக விளையாடி 26 ரன்னில் அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரிஷாப் பந்த் 48 ரன்கள் அடித்தார். பின்னர் மத்தியில் களமிறங்கிய தோனி அதிரடி ஆட்டத்தை காட்டாமல் நிதானமாக விளையாடி 35 ரன்னில்  விக்கெட்டை இழந்தார்.

இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 314 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் அணி பந்து வீச்சில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 5 விக்கெட்டை பறித்தார். இந்நிலையில் 315 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரரான தமீம் இக்பால் ,சௌமியா சர்க்கார் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவருமே தடுமாறி விளையாடி வந்தனர்.

அப்போது தமீம் இக்பால் 31 பந்திற்கு 22 ரன்களுடன் வெளியேறினர்.பின்னர் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன் இறங்கினர். தடுமாறி விளையாடிய சௌமியா சர்க்கார் ஹார்திக் பாண்டிய வீசிய வேக பந்தில் அவுட் ஆனார்.

பின்னர் ஷாகிப் அல் ஹசன் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன்கள் உயர்ந்தது.இப்போட்டியில் ஷாகிப் அல் ஹசன் 74 பந்தில் 66 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரி அடக்கும்.அடுத்தடுத்து களமிறங்கிய முஷ்பிகுர் ரஹீம் 24 , லிட்டன் தாஸ் 22 , மொசாடெக் ஹொசைன் 3 ரன்களுடன் வெளியேறினர்.

இறுதியாக பங்களாதேஷ் அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது 286 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி தோல்வியடைந்தது.இந்திய அணி பந்து வீச்சில் பும்ரா 4 விக்கெட்டையும் , ஹார்திக் பாண்டிய 3 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

author avatar
murugan