நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்.!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திருச்செங்கோட்டில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடித்தனர்.

இந்தியா முழுவதும் தற்போது நீட் தேர்வு தொடங்கியது, இன்று கொரோனா பரவலுக்கும் இடையே, திட்டமிட்டபடி நாடு முழுவதும் இன்று நீட் தேர்வுகள் இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. தமிழகத்தில் 14 நகரங்களில் நீட் தேர்வுகள் நடைபெறுகிறது. அதில், மொத்தம் 1,17,990 மாணவர்கள் தேர்வை எழுதி வருகின்றனர்.

கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். மேலும், நீட் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்துள்ள நிலையில், பலரும் அதிருப்தி அடைந்தனர்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அந்த வகையில், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரி திருச்செங்கோட்டில் இந்திய மாணவர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அதுமட்டுமில்லாமல் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.