இந்திய அணி அறிவிப்பு!!தமிழக வீரர் அதிரடியாக வெளியேற்றம்!!

முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது இந்திய அணி. இந்த தொடர் முடிந்த நிலையில்  பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இதில் முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர்கள் விவரம் :விராட் (கேப்டன் ),ரோகித் சர்மா(துணை கேப்டன்),ஷிகர் தவான்,ராயுடு,ஜாதவ்,பண்ட், தோனி,விஜய் ஷங்கர், முகமது சமி,சாஹல்,பூம்ரா,குல்தீப் ,கவுல் ,ஹர்டிக் பாண்டியா,ராகுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.மேலும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

Leave a Comment