இந்திய ரயில்வே நிர்வாகம் கூடுதலாக 100 சிறப்பு ரயில்களை இயக்க திட்டம்.!

நான்காம் கட்ட தளர்வுகளின் அடிப்படையில் இந்திய ரயில்வே மேலும் 100 பயணிகள் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

கொரோனா தொற்று நோய்களுக்கு மத்தியில் நான்காம் கட்ட தளர்வுகளை தளர்த்திய பின்னர், ஏற்கனவே இயங்கும் ரயில்களுக்கு கூடுதலாக அதிகமான பயணிகள் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில்ம், இந்திய ரயில்வே மேலும் சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக ரயில்வே அமைச்சகம் நேற்று தெரிவித்தது. ஏற்கனவே இயங்கும் ரயில்களுக்கு கூடுதலாக 100 சிறப்பு ரயில்களை இயக்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பேசிய ரயில்வே அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்திய ரயில்வே மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம். ரயில்வே அமைச்சக அறிக்கைகளின் படி, தேசிய போக்குவரத்து மேலும் 100 ரயில்களை இனிவரும் நாட்களில் இயக்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு செல்வதற்காக ரயில்வே மே 1 முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கத் தொடங்கியது. இது மே 12 முதல் 15 ஜோடி சிறப்பு ஏர் கண்டிஷனிங் ரயில்களையும், ஜூன் 1 முதல் 100 ஜோடி கால அட்டவணை ரயில்களையும் தொடங்கியது.

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் மார்ச் 25 முதல் இந்திய ரயில்வே பயணிகள், அஞ்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.