உலக சாதனை படைத்துள்ளது இந்திய ரயில்வேத்துறை.! -ரயில்வே வாரிய தலைவர் பெருமிதம்.!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கென தனி சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் ரயில்நிலைய ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பினாவில் இயங்கி வரும் ரயில்நிலையத்தில் தற்போது அதெற்கென தனி சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து அதன் மூலம் ரயில் நிலையத்தில் ரயில்கள் இயங்க உள்ளது.

இதுவரை எந்த நாட்டிலும், ஒரு ரயில் நிலையத்திற்கென தனி சூரிய ஒளி மின் நிலையம் உருவாக்கி அதன் மூலம் இயக்கப்பெற்றது இல்லையாம். இதனை ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகையில், ‘ பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் லிமிடெட் (BHEL) உடன் இணைந்து இந்த சூரிய ஒளி மின்சார நிலையமானது உருவாக்கபட்டட்டுள்ளது. 1.7 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின்சார நிலையத்தில் இருந்து ஒரு ஆண்டுக்கு 25 லட்சம் யூனிட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.’ என தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.