UK President Rishi Sunak - Suella Braverman

இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவி நீக்கம்.!

By

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அமைச்சரவையில் நாட்டின் உள்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்தவர் சுயெல்லா பிராவர்மன். இவர் இன்று இங்கிலாந்து அமைச்சரவையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் ரிஷி சுனக்கை போலவே, சுயெல்லா பிராவர்மனும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பாலஸ்தீன ஆதரவு பேரணி ஒன்று இங்கிலாந்தில் நடைபெற்றது. அது தொடர்பாக அரசு கட்டுப்பாட்டை மீறி சுயெல்லா பிராவர்மன் செய்தி வெளியிட்டார். இந்த காரணங்களுக்காக தான் சுயெல்லா பிராவர்மனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது என கூறப்படுகிறது.

Dinasuvadu Media @2023