1.5 லட்சம் வென்ற ஒராங்குட்டானின் புகைப்படம்…இந்திய வம்சாவளி புகைப்படக் கலைஞர் சாதனை..!

1.5 லட்சம் வென்ற ஒராங்குட்டானின் புகைப்படம்…இந்திய வம்சாவளி புகைப்படக் கலைஞர் சாதனை..!

  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாமஸ் விஜயன் என்ற புகைப்படக் கலைஞர் எடுத்த ஒராங்குட்டானின் ஆப்டிக்கல் இல்லுசன் படத்திற்கு 1.5 லட்சம் பரிசு.
  • தாமஸ் விஜயன் 2021 ஆம் ஆண்டின் நேச்சர் டிடிஎல் புகைப்படக் கலைஞர் விருதைப் பெற்றுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாமஸ் விஜயன் என்பவர் 2021 ஆம் ஆண்டின் நேச்சர் டிடிஎல் புகைப்படக் கலைஞர் விருதைப் பெற்றுள்ளார். நேச்சர் டி.டி.எல் என்பது உலகின் முன்னணி ஆன்லைன் இயற்கை புகைப்பட ஆதாரமாகும், அது இந்த ஆண்டுக்கான சிறந்த புகைப்படக் கலைஞரை தேர்வு செய்ய போட்டி ஒன்றை நடத்தியது.

இதன்மூலும் சுமார் 8,000 அதிகமான பலதரப்பட்ட புகைப்படங்கள் நேச்சர் டி.டி.எல் வளைதளப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வெற்றியாளர் யார் என்பதை நடுவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அவருக்கு 1,500 டாலர் பரிசு வழங்கப்படும் என்றும் டி.டி.எல் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாமஸ் விஜயன் என்ற புகைப்படக் கலைஞர் எடுத்த ஒராங்குட்டானின் ஆப்டிக்கல் இல்லுசன் புகைப்படம் வெற்றி பெற்றதாக நேச்சர் டி.டி.எல் அறிவித்துள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த புகைப்படக் கலைஞர் விருதை விஜயன் தட்டிச்சென்றார்.

மேலும் விஜயன் கேரளாவைச் சேர்ந்தவர், இப்போது கனடாவில் குடியேறியுள்ளார், அவர் பரிசைப் பெற்ற பின்பு பேசுகையில் “நான் தண்ணீரில் இருந்த ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்தேன்.தண்ணீர் ஒரு கண்ணாடியை உருவாக்கியது. பின்னர் நான் அதில் ஏறினேன் என்று கூறியுள்ளார்.

பின் அந்த மரத்தில் பல மணிநேரம் காத்திருந்து அந்த புகைப்படத்தை எடுத்ததாகவும் அதற்கு போர்னியோவில் ‘தி வேர்ல்ட் இஸ் கோயிங் அப்ஸைட் டவுன்’ என்ற தலைப்பு வைத்ததாகவும் கூறியுள்ளார். இந்த புகைப்படத்திற்கே நேச்சர் டி.டி.எல் 1,500 டாலர் பரிசை வழங்கியுள்ளது.

Join our channel google news Youtube