இந்திய கடல் எல்லையை காக்க வருகிறது புதிய 6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள்…

இந்திய கடல் எல்லையை காக்க வருகிறது புதிய 6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள்…

  • இந்தியாவின் மிக நீளமான கடல் எல்லையை பாதுகாத்துவருவது நம் இந்திய கற்படை ஆகும்.
  • இந்த இந்திய கப்பல்படைக்கு சொந்தமாக புதிதாக  6 அணு சக்தி நீர் மூழ்கி கப்பலை உருவாக்க தற்போது  திட்டமிடப்பட்டுள்ளது.

இதில்,  இந்திய ராணுவத்தில் கப்பற்படையை வலிமைபடுத்தும் விதமாக புதிதாக  ஆறு அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து கப்பற்படையின்  சார்பில் நாடாளுமன்ற  நிலை குழுவிடம் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் இந்திய கப்பற்படையிடம்  17 முதல் 31 ஆண்டுகளான கப்பல்கள்தான் உள்ளன எனவும் , கடந்த 15 ஆண்டுகளில் இரண்டு புதிய நீர்மூழ்கி கப்பல்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன என்றும்.

Image result for indian navy

அதிலும்,  ஐ.என்.எஸ் சக்ரா என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கி கப்பல் ரஷ்யாவிடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்டதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது கட்டப்பட உள்ள 6 அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்களும் உள்நாட்டில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடுகளிடம் இருந்து அச்சுருத்தல் நிலவிவரும் நிலையில் இந்தியாவின் பாதுகாப்பில் அதிக முக்கியம் வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

 

author avatar
Kaliraj
Join our channel google news Youtube