கொரோனா தொற்றிலிருந்து மீண்டு மாரடைப்பால் இறந்த இந்திய நாட்டவர்.!

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு மாரடைப்பால் இறந்த இந்திய நாட்டவர்.!

 இந்திய நாட்டவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு தற்போது மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது .இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றிலிருந்து மீண்ட இந்தியாவை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் சிங்கப்பூரில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள வீட்டு தளத்தில் மயங்கி கிடந்துள்ளார். அவரை சிங்கப்பூரில் உள்ள பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 48 வயதான இவர் மாரடைப்பால் இறந்ததாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ( The Straits Times) செய்தி வெளியிட்டுள்ளது. அந்த இந்திய நபர் ஏற்கனவே மே-15ல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரிசோதனை செய்த பின்னர், பிற நோயால் தற்போது வரை 11 பேர் இறந்துள்ளதாக சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) தெரிவித்துள்ளார். ஏற்கனவே சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கொரோனாவிலிருந்து சுமார் 3700 வெளிநாட்டு தொழிலாளர்கள் மீண்டு பணிக்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர். எனவே மொத்தமாக 35,985 பேர் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவர் உட்பட 192 நோயாளிகள் மருத்துவமனையில் உள்ளனர். அதே நேரத்தில் 6,219பேர் சமூக வசதிகளில் மீண்டு வருகின்றனர்

Join our channel google news Youtube