உங்கள் கணக்குகளை உளவு பார்க்கும் இந்திய அரசு.! எச்சரிக்கை விடுத்த கூகுள் நிறுவனம்..!

உங்கள் கணக்குகளை உளவு பார்க்கும் இந்திய அரசு.! எச்சரிக்கை விடுத்த கூகுள் நிறுவனம்..!

கடந்த சில நாட்களுக்கு இஸ்ரேலில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் வாட்ஸ் அப்பில் பலரது தகவல்களை  உளவு பார்த்ததாக பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் தற்போது இந்தியாவில் இருந்து சுமார் 500 -க்கும் மேற்பட்டோரின் கூகுள் கணக்குளை இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஹேக்கர்கள் ஹேக் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் உலக முழுவதும் சுமார் 12,000 கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களுக்கு நடுவே இதுபோன்ற தகவல் திருட்டு நடந்துள்ளது. இந்த தகவலை கூகுள்  நிறுவனத்தின்  பிரச்சினைகளை ஆய்வு செய்யும் குழுவில்  (Threat Analysis Group) உள்ள ஷேன் ஷன்ட்லி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் சுமார் 90 % க்கும் மேற்பட்ட ஹேக்கர்கள் கூகுள் நிறுவனத்தில் இருந்து  இ -மெயில் (e-mail) வருவது போன்று தகவலை அனுப்புகின்றனர்.
கூகுள் என்பதற்கு பதிலாக “Goolge” என்று இந்த மெயில் (e-mail) இருக்கும். இதன்காரணமாக ஒருசிலர் இந்த “Goolge” வார்த்தையை சரியாக கவனிக்காமல் “Google” என்று நினைத்து  தகவலை கவனக்குறைவால் தகவலை படித்து விடுவார்கள். மேலும் இந்த தகவலில் ஒரு லிங்க் (Link) வரும் நாம் அந்த லிங்கை கிளிக் (Cllick )  செய்ததும் அதன் மூலமாக அந்த கணக்கில் உள்ளவர்களின் பாஸ்வேர்ட் (Password) உள்ளிட்ட தகவல்களை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறனர். அப்போது அவர்களின் பணத்தை பறிக்கவும் முயற்சி செய்து வருகின்றனர்.      இதனால் இ -மெயில் (e-mail) பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக பயன்படுத்தும் படி கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube