கடந்த ஐந்து ஆண்டில் இந்திய பொருளாதாரம் 2.7 லட்சம் கோடி டாலராக உயர்வு -நிர்மலா சீதாராமன்

மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலை செய்து வருகிறார். பட்ஜெட் உரையில் பேசிய நிர்மலா சீதாராமன்  2014-ம் ஆண்டு மோடி ஆட்சி அமைக்கும் போது இந்திய பொருளாதாரம் 1.55 லட்சம் கோடி டாலராக இருந்தது.

கடந்த ஐந்து ஆண்டில் இந்திய பொருளாதாரம் 2.7 லட்சம் கோடி டாலராக உயர்ந்து உள்ளது.சந்திரயான் , சுகன்யான் போன்ற விண்வெளி திட்டங்களில் இந்தியா விண்வெளி துறையில் சாதனை படைத்தது உள்ளது.

மேலும் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா 5  ட்ரில்லியன் அமெரிக்கா டாலர் கொண்ட பொருளாதார நாடாக மாறும் என கூறினார்.

author avatar
murugan