உலகின் வலிமையான ராணுவங்கள் பட்டியல் வெளியீடு!இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?

இந்தியா  உலகின் 4-வது வலிமையான ராணுவத்தை உடைய நாடாக உருவெடுத்துள்ளது. உலக அளவில் 133 நாடுகளின் ராணுவ வலிமை குறித்த குளோபல் ஃபயர் பவர் இண்டக்ஸ் 2017 என்ற பட்டியல் வெளியிடட்ப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில், அமெரிக்காவும், 2-வது இடத்தில், ரஷ்யாவும், 3-வது இடத்தில் சீனாவும் உள்ளன.

இந்தியா  4-வது இடத்தைப் பிடித்துள்ளது. பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான், துருக்கி, ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு பிந்தைய இடங்களைப் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 13-வது இடத்தைப் பிடித்துள்ளது. வரும் ஆண்டுகளில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி சீனா 2-வது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் அணு ஆயுதங்கள் கையிருப்பு, இந்தப் பட்டியலில் கவனத்தில் கொள்ளப்படவில்லை

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment