இந்தியன்-2 வின் மிரளவைக்கும் அப்டேட்.! விவேக்கிற்கு பதில் மின்னல் நடிகர்.!?

இந்தியன்2 திரைப்படத்தில் விவேக் நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகர் குரு சோமசுந்தரத்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

உலகநாயகன் கமல்ஹசன் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் இந்தியன். இந்த படத்தின் 2ஆம் பாகம் தயாராக உள்ளதாக 2 வருடங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு, பின்னர் படப்பிடிப்பில் விபத்து, கொரோனா படக்குழுவினர் இடையே பிரச்சனை என ஷூட்டிங் நடைபெறாமலே இருந்தது.

இதற்கிடையில் கமல்ஹாசன் விக்ரம் பட ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.

தற்போது தயாரிப்பு நிறுவனம் – இயக்குனர் – நடிகர் என அனைவரிடத்திலும் பிரச்சனை பேசி முடிவு செய்யப்பட்டுவிட்டதாம். விரைவில் அப்பட ஷூட்டிங் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் இன்னோர் சிக்கல் இருந்தது. இப்படத்தில் நடித்திருந்த நடிகர் விவேக் இந்த வருட ஏப்ரலில் உயிரிழந்தார். அதனால், அவர் நடித்த காட்சியை எப்படி என்ன செய்வது வேறு நடிகரை எப்படி நடிக்க வைப்பது என யோசித்து வந்துள்ளனர்.

தற்போது அந்த வேடத்தில் குரு சோமசுந்தரம் நடிக்க இருக்கிறாராம். அவர் நடிப்பில் அண்மையில் நெட்பிளிக்ஸில் வெளியான மின்னல் முரளி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அப்படத்தில் சிபு எனும் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார்.

இவர் தமிழில், பேட்ட, ஜோக்கர், ஜிகர்தண்டா, ஜெய் பீம் என பல்வேறு திரைப்படங்களில் நடித்து நல்ல நடிகராக வலம் வருகிறார்.