தொடர் வெற்றியில் இந்தியா .. 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து தோல்வி ..!

By

ருநாள் உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா – நெதர்லாந்து அணிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் முடிவு செய்தனர். அதற்கு அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் அதிரடியாக விளையாடி இருவரும் அரை சதம் விளாசி  சுப்மன் கில் 51 ரன்னிலும், ரோகித் 61 ரன்னில் விக்கெட்டை இழந்தனர்.

   
   

பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் , விராட் கோலி இருவரும் கூட்டணி அமைக்க சிறப்பாக விளையாடிய விராட் கோலி 51 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய கேஎல் ராகுல் உடன் இணைந்து ஷ்ரேயாஸ் ஐயர் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். இதில் அதிரடியாக விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல்  சதம் விளாசினார். இருப்பினும் கே.எல் ராகுல் 102 ரன்களும் , ஷ்ரேயாஸ் ஐயர்  128 * ரன்களும் எடுத்தனர். இறுதியாக இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்கள் குவித்தனர்.

நெதர்லாந்து அணியில் பாஸ் டி லீடே 2 விக்கெட்டையும் , பால் வான் மீகெரென், வான் டெர் மெர்வே, தலா 1 விக்கெட் பறித்தனர். 411 ரன்கள் இலக்குடன் இறங்கிய நெதர்லாந்து அணி 47.5 ஓவரில் 250 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக தேஜா நிடமனுரு 54, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 45, கொலின் அக்கர்மேன் 35, மேக்ஸ் ஓ டவுட் 30 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்காமல் சொற்ப ரன் எடுத்து வெளியேறினர்.

இந்திய அணியில் பும்ரா , ஷமி , ஜடேஜா , மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்டையும் , ரோஹித் ,கோலி தலா 1 விக்கெட்டை பறித்தனர். நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாடிய அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

Dinasuvadu Media @2023