கொரோனாவின் விளைவுகளை தடுக்க இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் - பிரதமர் மோடி

கொரோனாவின் விளைவுகளை தடுக்க இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என

By leena | Published: May 23, 2020 09:40 PM

கொரோனாவின் விளைவுகளை தடுக்க இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இன்று இலங்கை அதிபர்  கோத்தபய ராஜபக்ஷவுடன், இந்திய பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். இவர்கள் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்தும், பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்தும் இருவரும் உரையாடியுள்ளனர். 

மேலும், இந்திய தனியார் துறையால் இலங்கையில் முதலீடுகள் மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இருவரும் உரையாடியுள்ளனர். 

மேலும், பிரதமர் மோடி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம், கொரோனாவின் விளைவுகளை தடுக்க இலங்கைக்கு இந்தியா  தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் உறுதியளித்துள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc