இடைத் தேர்தல் கருத்துக்கணிப்பு : 14 தொகுதிகளில் திமுக வெற்றிபெறும்

இடைத் தேர்தல் கருத்துக்கணிப்பு : 14 தொகுதிகளில் திமுக வெற்றிபெறும்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நேற்று முன்தினம் வெளியாகி பெரும் விவாதத்திற்கு உள்ளாக்கியது .இதில் ஆளும் பாஜக அரசு 300-க்கு அதிகமான இடங்களை கைப்பற்றும் என பல ஊடகங்கள் தனது கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டது .இதில் பல குளறுபடிகள் இருந்தது.குறிப்பாக தேர்தலில் போட்டியிடாத ஆம்ஆத்மி உத்தரகாண்டில் 2.9 % வாக்குகள் பெரும் என வெளியிட அது பெரும் சந்தேகத்தையும் விவாதத்தையும் கிளப்பியது. இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்தது.

இதனிடையில் தமிழகத்தில் மக்களவை தேர்தல் திமுக தலைமையிலான அணி 34-38 இடங்களை கைப்பற்றும் எனவும் அதிமுக 3-4 இடங்களை கைப்பற்றும் எனவும் கருத்துக்கணிப்பு வெளியானது .இதற்க்கு பதிலளித்த முக.ஸ்டாலின் கருத்துக்கணிப்பு திமுகவுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் வந்தால் கவலையில்லை என்றார். இந்த கருத்துக்கணிப்பை விமர்சித்த முதலமைச்சர்.எடப்பாடி பழனிச்சாமி இது கருத்து கணிப்பல்ல, கருத்துத்திணிப்பு என்றார் .

இந்த நிலையில் தமிழகத்தில் 22 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது இந்தியா டுடே.14 தொகுதிகளை திமுக கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.மேலும் 3 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும் என்றும் 5 தொகுதிகளில் கடுமையான போட்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *