கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடத்தில உள்ளது.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் வல்லரசு நாடான அமேரிக்கா உள்ள நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில பிரேசில் மற்றும் இந்தியா உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், நாங்கள் இதுவரை ஏறக்குறைய 6.5 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனைகளை நடத்தி இருக்கிறோம் என்றும், வேறு எந்த நாடும் இந்த எண்ணிக்கையை நெருங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியா 1.1 கோடி கொரோனா பரிசோதனைகளுடன் 2வது இடத்தில் இருக்க கூடும் என்றும், அந்த நாட்டில் 150 கோடி மக்கள் வசிக்கின்றனர்.  உலகிலேயே இதுவரை பரிசோதனைகளில் முதல் இடத்தில் நாங்கள் இருக்கிறோம் என்றும்,  அதிக தரமுள்ள பரிசோதனைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.