பூடானுக்கு மருத்துவ சாதனங்களை வழங்கியது இந்தியா.!

பூடானுக்கு மருத்துவ சாதனங்களை வழங்கியது இந்தியா.!

கொரோனா பரிசோதனை செய்வதற்கான ஆர்.டி. பி.சி.ஆர் மருத்துவ சாதனங்களை பூட்டான் அரசுக்கு இந்தியா வழங்கியது.

இதுகுறித்து இந்திய தூதரகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்றின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதில், தனது நெருங்கிய நண்பரும், அண்டை நாடுமான பூட்டானுடன் இந்தியா நிற்கும் என்ற பிரதமர் மோடியின் உறுதிமொழியைக் கருத்தில் கொண்டு 20,000 சோதனைகளுக்கான COVID-19 RT-PCR சோதனைக் கருவிகளை திம்புவில் உள்ள இந்திய தூதரகம் பூட்டான் ராயல் அரசிடம் ஒப்படைத்தது. இந்த ஆர்டி-பி.சி.ஆர் சோதனை கருவிகளை வழங்குவது பூட்டானின் சுகாதார அமைச்சகத்திற்கு அத்தியாவசிய பரிசோதனைகளை மேற்கொள்ள உதவும்.

பூட்டானின் தேவைகளுக்கு இந்தியா அதிக முன்னுரிமை அளித்துள்ளது. இதுவரை இந்தியா, பூட்டானுக்கு பாராசிட்டமால், செட்ரைசின், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் மருத்துவ உபகரணங்கள் (பிபிஇ கருவிகள், என்95 முகக்கவசம், ஆர்டி-பிசிஆர் சோதனை கருவிகள், எக்ஸ்ரே இயந்திரம்) ஆகியவை வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி வேட்பாளர்களின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்காக பூட்டானுடன் ஒத்துழைக்கிறது. பூட்டானுக்கு இந்தியா தொடர்ந்து அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது.

https://www.indembthimphu.gov.in/adminpart/RT_PCR_test_kits_24_Dec_2020.pdf

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube