ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது – பிரதமர் மோடி!

ஒலிம்பிக்கில் ஹாக்கி ஆடவர் அணி ஜெர்மனியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜெர்மனியை 5:4 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இந்தியா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 41 ஆண்டுகளுக்கு பின்பதாக இந்திய ஆடவர் அணி ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. எனவே இந்திய ஹாக்கி ஆடவர் அணிக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்றைய நாள் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் பொறிக்கப்படும் நாள். வெண்கல பதக்கத்தை வென்ற எங்கள் ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனை மூலமாக ஒட்டுமொத்த நாட்டின், குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். ஆண்கள் ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal