இன்று நடைபெற இருந்த இந்திய அணி தேர்வு ஒத்தி வைப்பு!

இன்று நடைபெற இருந்த இந்திய அணி தேர்வு ஒத்தி வைப்பு!

இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 , 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை எம்.எஸ்.கே பிரசாந்த் தலைமையிலான தேர்வுக்குழு மும்பையில் இன்று தேர்வு செய்ய இருந்தது.

இந்த தொடரில் விராட் கோலி, பும்ரா ஓய்வு , இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் தோல்வியடைந்தது அடுத்து இந்திய அணியில் சில மாற்றங்கள் போன்ற விவகாரங்கள் தொடர்பாக எதிர்ப்புகள் வந்த நிலையில் இந்திய அணி தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்திய அணி தேர்வு வரும் ஞாயிற்றுகிழமை தேர்வு செய்யப்பட உள்ளனர்.காயத்தில் சிக்கிய வீரர்களின் உடல் தகுதியின் அறிக்கை சனிக்கிழமை மாலை கிடைக்கும் என்பதாலும்  இந்திய அணியின் தேர்வு ஒத்திவைத்ததாக கூறப்படுகிறது.

author avatar
murugan
Join our channel google news Youtube