வெற்றிபெறுமா இந்தியா? 195 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!!

2 ஆம் டி-20 போட்டியில் அபாரமாக ஆடிய ஆஸ்திரேலியா அணி, 194 ரன்கள் எடுத்தது. 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது இந்திய அணி களமிறங்கவுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, மூன்று ஒருநாள், மூன்று டி-20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியதை தொடர்ந்து, முதல் டி-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

இந்தநிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் இரண்டாம் டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி ஆர்சி ஷார்ட் – மத்திவ் வேட் களமிறங்கினார்கள். தொடக்கத்தில் டி ஆர்சி ஷார்ட் 9 ரன்கள் அடித்து வெளியேற, ஸ்டீவன் ஸ்மித்துடன் மத்திவ் வேட் இணைந்து அதிரடியாக ஆடிவந்தனர். இவர்களின் கூட்டணியில் ரன்கள் உயர, அரைசதம் அடித்து 58 ரன்கள் அடித்து மத்திவ் வேட் தனது விக்கெட்டை இழந்தார்.

அதனையடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 22 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, 46 ரன்களில் ஸ்டீவன் ஸ்மித் வெளியேறினார். இறுதியாக ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் அடித்தது. 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது இந்திய அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சை பொறுத்தளவில் யாக்கர் மன்னன் தலா 2 விக்கெட்டும், சாஹல் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.