இந்தியா போராடி தோல்வி…தொடரை இழந்தது……!!

36

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி T20 போட்டி  ஹாமில்டனில் இன்று நடைபெற்றது.இதில்

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.பின்னர்  213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடிமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

கடைசியாக இந்திய அணி20 ஓவர்களில்  6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வி அடைந்தது. இந்நிலையில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 2-1 என கணக்கில் வென்றது.ஏற்கனவே இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றதுக்கு பழி தீர்த்துக்கொண்டது நியூசிலாந்து அணி.