கொரோனா வைரஸ் பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று – WHO தலைவர்

கொரோனா வைரஸ் பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று – WHO தலைவர்

கொரோனா வைரஸ் பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று .

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஓராண்டாக தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்தியாவில் இந்த வைரஸின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தனது ஆட்டத்தை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இதனை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது மட்டுமல்லாமல் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

மருத்துவமனைகளில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் குறைவு காரணமாகவும் உயிரிழப்பது வேதனையை அளிக்கிறது. இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் பண்ணுவதற்கு  நீண்ட வரிசையில் காத்திருக்கும் பரிதாபமான சூழ்நிலைகளும் தற்போதைய சூழலில்  ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை குறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறுகையில், இந்தியாவின் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. இது வேதனை அளிக்கிறது. கொரோனா வைரஸ் பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube