கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபித்த ஃபைசர் நிறுவனத்துடன் இந்தியா பேச்சுவார்த்தை!

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபித்த ஃபைசர் நிறுவனத்துடன் இந்தியா பேச்சுவார்த்தை.

ஜெர்மனியில், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் 90% வெற்றியை பெற்றுள்ளதாக pfizer நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வை, ஃபிஃசர் மற்றும் பயோடெக் நிறுவனங்கள் மேற்கொண்டனர். இந்த நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பு மருந்தானது, 6 நாடுகளில் 43,000-க்கும் மேற்பட்டோருக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையை மேற்கொண்ட ஒருவருக்கு கூட பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஃபைசர் நிறுவனமானது, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் நிறுவனங்களுடன் விநியோக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

ஆனால், இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இதுகுறித்து ஃபைசர் நிறுவனத்துடன் இந்தியா பேச்சு வார்த்தை நடத்தி வருவதற்காக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.