முன்னேற்றப் பாதையில் இந்திய பொருளாதாரம் செல்கிறது !

வெளிநாடுகளில் எம்.பி. மற்றும் மேயர்களாக இருக்கும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் 23 நாடுகளில் பதவியில் இருக்கும் 140க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள், மேயர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய வம்சாவளியினர் அவரவர் வாழும் நாடுகளில் கொள்கை வடிவமைப்பு, அரசியல் ஆகியவற்றில் பங்கெடுப்பதால், இந்தியர்கள் பெருமை கொள்வதாக தெரிவித்தார். 21ஆம் நூற்றாண்டை மனதில் கொண்டு, போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா தனது முதலீட்டை அதிகரித்து இருப்பதாக கூறிய அவர், கடந்த 3 ஆண்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட முதலீடு, கட்டுமானம், வான் போக்குவரத்து, சுரங்கம், மின்சாதனப் பொருட்கள், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதை உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார். இந்திய குடிமக்கள் மட்டுமின்றி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீது வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அதிக அக்கறை காட்டி வருவதாக கூறிய அவர், ஒரு நாளின் 24 மணி நேரமும், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிரச்சனைகளை அறிந்து, அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
source: dinasuvadu.com

Leave a Comment