அமெரிக்காவுக்கு Hydroxychloroquine மருந்தை வழங்க இந்தியா முடிவு.!

கொரோனா தடுப்புக்காக அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் ஆர்டர் செய்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை வழங்க இந்தியா முன்வர வேண்டும் என்றும் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதித்தால் பாராட்டு, இல்லையென்றால் பதிலடி என டிரம்ப் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு வழங்க இந்தியா முடிவெடுத்துள்ளது. 

அண்டை நாடுகள், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. மேலும் மனிதாபிமான அடிப்படையில் பாரசிட்டமால், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்யப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருந்து ஏற்றுமது விவகாரத்தை அரசியலாக்க விருப்பவில்லை எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் மருந்தை அனுப்பாவிடில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்த நிலையில், இந்தியா மருந்தை அனுப்ப முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்